தமிழகத்தில் இன்று மேலும் 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! 1,007 பேர் டிஸ்சார்ஜ் - 11 பேர் பலி!

கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,19,845 ஆக அதிகரித்துள்ளது.


கோவை: தமிழகத்தில் இன்று மேலும் 910 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,19,845 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருகிறது.

அதன்படி, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,935 ஆக இருந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 910 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,19,845 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் இன்று மட்டும் 1,007 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 7,99,427 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தற்போது வரை 12,146 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 238 ஆக உள்ளது. இதுவரை பரிசோதனை மையங்கள் மூலம் ஒரு கோடியே 43 லட்சத்து 21 ஆயிரத்து 46 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 246 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,25,998 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவையில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52,496 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நீலகிரியில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நீலகிரியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7,968 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,144 ஆக உயர்ந்துள்ளது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...