பொள்ளாச்சியில் புகைப்பட, வீடியோ கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தனி நலவாரியம் அமைக்க கோரிக்கை!

கோவை: புகைப்பட வீடியோ கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும். என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: புகைப்பட வீடியோ கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தனி நலவாரியம் அமைத்து தரவேண்டும். என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழ்நாடு போட்டோ வீடியோகிராபர் தொழிற் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா நிகழ்ச்சி பொள்ளாச்சியில் இன்று நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கோவை தெற்கு மாவட்ட உறுப்பினர்களுக்கு காலண்டர், டைரி, அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் அச்சங்கத்தின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் 3 லட்சம் புகைப்பட வீடியோ கலைஞர்கள் உள்ளனர். இவர்களை நம்பி 20 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் 19 புகைப்பட, வீடியோ கலைஞர்கள் இறந்துள்ளனர்.



இதில் பெரும்பாலான கலைஞர்கள் கடன்சுமை, வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் 3 லட்சம் புகைப்பட வீடியோ கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...