பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள டி.கே.புதூரை சேர்ந்தவர் அகத்துசாமி (45). இவரது சகோதரன் அகத்தீஸ்வரன்(45). இருவரும் நேற்று மாலை பொள்ளாச்சி பாலக்காடு ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அகத்தீஸ்வரன் வாகனத்தை இயக்கி வந்தார்.

அப்போது, ஐய்யம்பாளையம் அருகே அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்ததிம்மங்குத்து பகுதியைச் சேர்ந்த ராஜன் (62) என்பவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால்,ன்மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும், காயமடைந்த சகோதரர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக, உயிரிழந்த ராஜனின் மகன் கார்த்திக் (35), கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி தாலுகா போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...