கோவையில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டத்தின் போது, மு.க. ஸ்டாலிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகளின் தொகுப்பு..!

கோவை: கோவையில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரத்தில் நடைபெற்றது.

கோவை: கோவையில் திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை இன்று தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தேவராயபுரத்தில் நடைபெற்றது. 

இதில், திரளாக கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம், குறைகளை கேட்டு அறிந்த, திமுக தலைவர் மு க ஸ்டாலின், அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். 

கிராம சபை கூட்டத்தில்மக்கள் வைத்த கோரிக்கைகள் வருமாறு:-

- விவசாயத்திற்கும் ஆடுமாடுகள் வளர்ப்பிற்கும் நீர் மிகவும் தேவையாக இருக்கிறது. ஆனால் சிறுவாணி குடிநீர் தனியாருக்கு தாரை வார்க்க படுகிறது. மீண்டும் சிறுவாணி குடிநீரை மீட்டுத்தர வேண்டும். 

- நிலத்தடி நீர்மட்டம் ராட்ஜச குழாய்கள் பதிப்பது உறிஞ்சப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும். 

- விவசாயிகள் உடைய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய நிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் நுழைந்து விளைவு பொருட்களை அளித்து செல்கிறது. வனத்துறையினர் வந்து காட்டுப்பன்றி விரட்டுவதற்கு முன்பாக எல்லா பொருள்களும் அளித்து விட்டு சென்று விடுகிறது. ஆதலால் காட்டுப்பன்றிகளை விவசாயிகளே தாக்கி அழிக்க அனுமதி வழங்க வேண்டும். 

- கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது விவசாயிகளுக்கு பெற்ற 7,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகள் 5 ஆயிரம் ரூபாய் வாங்கிய கடன் வட்டி சேர்த்து 50 ஆயிரம் ஆகியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 

- அரசு ஊழியர்களுக்கு பென்சன் உள்ளதுபோல் 60 வயதுக்கு மேற்பட்ட கஷ்டப்படும் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

- 100 நாள் வேலையில் ஈடுபடக் கூடியவர்கள் குளம், குட்டைகளில் மட்டுமே பணியாற்றுகிறார்கள். அவர்களை, விவசாய நிலங்களில் வேலை பார்க்க அரசு பயன்படுத்த வேண்டும். 

- நீட் தேர்வின் காரணமாக 2 ஆண்டுகளாக கடுமையாக போராடி 3-வது முறை அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். அதற்கு கலைஞர் வழங்கிய 3 சதவீத சிறுபான்மை இட ஒதுக்கீடு காரணம். நான் எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு படிக்கக்கூடிய கீர்த்தனா என்று ஒரு மாணவி கூறினார். ஆதலால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

- கோவையில் உள்ள விவசாயிகள் 1,500 அடி போர் போட்டு விவசாயம் செய்கின்றனர். நொய்யல் ஆற்றின் தண்ணீர் வீணாக செல்கிறது. நொய்யல் ஆறு செல்லக்கூடிய வழிகளில் குளம் குட்டைகளை தூர்வாரி, அதை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

- விவசாயிகளுக்கு விதை பொருட்கள் இலவசமாக வழங்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் உள்ள நாங்கள் கொரோனா காலத்தில் பணம் திரும்ப செலுத்த முடியவில்லை. அந்தப் பணம் அசலுக்கு மேல் வட்டி அதிகமாக போடப்பட்டுள்ளது. தாங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உடைய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 

- வேலைவாய்ப்பு அலுவலகம் எதற்கு என்றே தெரியவில்லை. நாங்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துள்ளோம். காசு உள்ளவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கிறது. ஆதலால், ஆட்சிக்கு வந்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். 

- அருந்ததியர் சமுதாயத்தில் 10 வருட காலமாக கல்வி, வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தோம் கலைஞர் வழங்கிய 3 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக இப்போது பொருளாதார ரீதியில் முன்னேறி உள்ளோம். இன்னும், எங்கள் சமுதாய மக்களுக்கு அடிப்படை வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பிட வசதி, வீட்டுமனைப்பட்டா, திருமண சமூகக் கூடம், எங்கள் கிராமத்தில் இல்லை ஏற்படுத்தித் தர வேண்டும். 

- மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ஊனமுற்றோருக்கான உதவித்தொகை தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

- பனைமரம், பாக்கு மரம் ஏறுபவர்கள் விபத்துக்குள்ளாகி எலும்புகள் முறிந்து மிகவும் கஷ்டப்படுகின்றனர். அந்த தொழிலாளிகளுக்கு சிறப்பு நலவாரியம் அமைத்து உதவவேண்டும். 

- நரசிபுரம் வேடப்பட்டி வரை நிலத்தை அபகரித்து விவசாய நிலத்தை அழித்து கட்டிடங்கள் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும். 

- நரசிபுரம் பகுதியில் கழிவுநீரை சுத்திகரிக்க கூடிய நிறுவனம் உருவாக்க வேண்டும். 

- நொய்யல் ஆற்றின் நீர், தென்மேற்கு பருவமழையின் போது தடுப்பணை இல்லாததால் விரயமாகிறது. தடுப்பணை கட்டி நொய்யல் ஆற்று நீரை சேமிக்க வேண்டும். 

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பேசும்போது, நீங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும்.

எதையும் ஆய்வு செய்து முடிவெடுக்கும் பெண்கள், தேர்தலில் ஆராய்ந்து பார்த்து வாக்களிப்பார்கள்..! 

பொதுவாக, பெண்கள் ஒரு புடவை எடுக்க கடைக்கு சென்றார்கள் என்றால் புடவை காட்டனா, சில்கா, இது சாயம் போகுமா, போகாதா? என பலமுறை ஆய்வு செய்வார்கள். கத்தரிக்காய் வெண்டைக்காய் வாங்க மார்க்கெட்டுக்கு சென்றால் கத்திரிக்காய், வெண்டைக்காயின் காம்பை உடைத்து சோதனை செய்வார்கள். மண்பானை மற்றும் தேங்காய் வாங்க சென்றால் தட்டி பார்த்து வாங்குவார்கள். மீன் புதியதாக என பார்ப்பதற்கு அதன் செதில்களை தூக்கிப் பார்த்தால் அதில் இருக்கக்கூடிய இரத்தத்தின் தன்மையை வைத்து புதிதா என்று ஆய்வு செய்வார்கள். கருவாடு வாங்கும் போது கூட அதை நுகர்ந்து பார்த்து வாங்குவார்கள். நாற்றம் அடிக்க கூடியதுதான் கருவாடு என்றாலும், அதைமுகர்ந்து பார்த்து இது நல்ல நாற்றமா? கெட்ட நாற்றமா? என எதை செய்தாலும் இவ்வளவு கவனத்தோடு செயல்படக்கூடிய பெண்கள், வரக்கூடிய தேர்தலில் நாட்டைப் பற்றி மட்டும் கவலை கொள்ளாமல் போய்விடுவார்களா? கண்டிப்பாக சகோதர சகோதரிகள் வரக்கூடிய தேர்தலில் ஆராய்ந்து பார்த்து வாக்களிப்பார்கள். எனவே, தி.மு.க வெற்றி பெறுவது உறுதி என கூறினார். 

இறுதியாக, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுகவின் கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகளான, எம்எல்ஏ கார்த்திக், சி.ஆர் ராமச்சந்திரன், ரவி, சாமிநாதன், வேலுச்சாமி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், எம்.பி சண்முகசுந்தரம், சேனாதிபதி, தென்றல் செல்வராஜ், உட்பட கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...