கோவை: புத்தாண்டை வரவேற்ற என்ஜினீயர் மாடிப்படியில் தடுமாறி விழுந்து இறந்தார். மது போதையால் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் தினேஷ் குமார் (வயது 26), பி.இ பட்டதாரியான இவர் கோவை ராமநாதபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள ஒரு கம்பெனியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். திருமணமாகாத இவர் தனது நண்பர்களுடன் தான் வேலை செய்யும் கம்பெனியில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார். நண்பர் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறினார். அதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் செல்போன் மூலமாக வாழ்த்துக்களை மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
சிறிது நேரத்தில் ஆரவாரம் அடங்கியதும். தனது நண்பர்களுடன் மாடியிலிருந்து இறங்கினார். அப்போது கால் தடுமாறி விழுந்தார். விழுந்த வேகத்தில் படியிலிருந்து `கடகட'வென உருண்டு கீழே விழுந்த தினேஷ்குமாரின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் மற்றும் கம்பெனி ஊழியர்கள் தினேஷ்குமாரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் தினேஷ்குமார் தவறி விழுந்து இறந்ததாக போலீசார் கூறினர்.