கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு உள்பட்ட வால்பாறை பகுதியில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு 3 நாள் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்திலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வருகின்றனர்.

சுற்றுலாப்பயணிகள் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் வருவதால் ஆழியார் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லாமல் இருக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின்பேரில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் இந்த வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.