பொள்ளாச்சி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது கார் மோதி விபத்து - சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு, கேரள சமாஜம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேஷ்கர் (17), ரோஹித் (17), கோட்டம் பட்டியைச் சேர்ந்தவர் கவின்குமார் (16). நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று மாலை காரில் பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியதில் காருக்குள் இருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே கணேஷ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, ரோஹித், கவின்குமார் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருடைய மனைவி ஜெயராணி (46), ஓட்டல் உரிமையாளர்.

இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடித்து ஜெயராணி ஓட்டலை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் சாப்பாடு கேட்டனர். அவர் சாப்பாடு இன்று இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் உருட்டுக்கட்டையால் ஜெயராணி தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராணியை தாக்கிய எல்.ஐ.சி காலனியை சேர்ந்த கார்த்திக் (20) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரது நண்பர் அஜித் (20), என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...