உதகையில் கணவன் மனைவி இடையேயான சண்டையில் காயமடைந்த மனைவி பரிதாபமாக உயிரிழப்பு - பயத்தில் கணவன் தற்கொலை முயற்சி!

நீலகிரி: உதகையில் கணவன் மனைவி இடையேயான சண்டையில் காயமடைந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி: உதகையில் கணவன் மனைவி இடையேயான சண்டையில் காயமடைந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து, அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த பிரதீப் (29). அவரது மனைவி ஜமுனா (27). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது பிரதீப் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிவித்து உள்ளார். கணவன் மனைவி இடையே எப்பொழுதும் சண்டை நடப்பது வழக்கமாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கணவன் மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பிரதீப் வெறித்தனமாக மனைவியை தாக்கியதில் தலையின் பின்புறம் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் ஜமுனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, கணவன் பிரதீப் பயத்தில் வார்னிஷ் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஊட்டி பி 1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...