கோவை: வரும் வருடத்தில், நம்மை நாமே மேலான மனிதர்களாக்கி இன்னும் மேன்மையான உலகை உருவாக்குவதற்கான துணிவும், உறுதியும் நம் அனைவருக்கும் இருக்கவேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நம் அனைவரது வாழ்வையும் தலைகீழாக புரட்டிப்போட்டதில், 2020-ம் ஆண்டு இந்த தலைமுறைமீது அழிக்க முடியாத சுவட்டினைப் பதித்திருக்கிறது. கடந்த நூற்றாண்டைத் திரும்பிப் பார்த்தால் போர், பெருந்தொற்றுகள் மற்றும் இயற்கைப் பேரிடர்களைப் பொறுத்தவரை 21-ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகள் வரப்பிரசாதமாக இருந்துள்ளன. மிக மோசமான சூழலியல் அழிவின் அறிகுறிகள் தெரியத் துவங்கியிருக்கும் இவ்வேளையில், வருங்கால சந்ததியினருக்காக நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுப்பதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நேரத்தில் இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று நம் அனைவரையும் தடுமாற வைத்திருக்கிறது. இந்தப் பெருந்தொற்று நம்மை பெரும் அவதிக்கு ஆளாக்கினாலும், இது நாம் கையாளக்கூடிய பிரச்சினையாகத்தான் இருக்கிறது. குடிமக்கள் விழிப்புணர்வுடனும், பொறுப்பாகவும் செயல்பட்டால் இதை நம்மால் நிறுத்தமுடியும். எதிர்செயல் செய்யாமல் விழிப்புணர்வாக பதில் செயல் செய்யும் மனித ஆற்றலில்தான் தீர்வு இருக்கிறது. இந்தப் பெருந்தொற்றைத் தாண்டி வருவதற்கு மட்டுமல்ல, அதிக நாகரிகமும் நிலைத்தன்மையும் மிகுந்த உலகிற்கான புதிய சாத்தியங்கள் உருவாக்குவதற்கும் இதுதான் தீர்வு.
சத்தியங்களுக்கும் நிஜத்திற்கும் இடையே கடக்கவேண்டிய தூரம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. வரும் வருடத்தில், நம்மை நாமே மேலான மனிதர்களாக்கிக்கொண்டு, அதன்மூலம் இன்னும் மேன்மையான உலகை உருவாக்குவதற்கான துணிவும், உறுதியும், விழிப்புணர்வும் நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். முன்நோக்கிச் செல்ல வேதனைப்படுவது வழியல்ல, அனைத்து உயிர்களுக்கும் அர்த்தமுள்ளதாக இருக்கக்கூடியதை உருவாக்க நம்மை அர்ப்பணிப்பதுதான் வழி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.