மேட்டுப்பாளையம் - உதகை இடையே மீண்டும் மலை ரயில் இயக்கம்!

கோவை: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்றுமுதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.


கோவை: மேட்டுப்பாளையம் - உதகை இடையே இன்றுமுதல் வழக்கமான சாதாரண கட்டணத்தில் மீண்டும் மலை ரயில் இயக்கப்படுவதாக மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

ஆங்கிலேயர் காலத்தில் 1989ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரைமலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி இயற்கையான பசுமையான சூழலில் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக கல்லாறு, அடர்லி, ரன்னிமேடு குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக 46 கி.மீ தூரத்தைக் கடந்து ரயில் உதகை செல்கிறது. இந்த மலை ரயில் பாதையின் இடையே 19.50 கி.மீ தூரம் பல்சக்கரபாதையும், 209 வளைவுகள், 16 ரயில் குகைகள் மற்றும் 250 பாலங்களும் உள்ளன.

அடர்ந்த வனப்பகுதியில் ரயில் செல்லும்போது காட்டெருமை, காட்டுயானை, கரடி, சிறுத்தை, புள்ளிமான், கடமான், வரையாடு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் மட்டுமல்லாமல் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து செல்லலாம். இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளனமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் மலை ரயிலுக்கு சர்வதேச கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவால் உலக பழமையான கலாச்சார இடங்களில் ஒன்றாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் மலை ரயில் 9 மாதங்களுக்குப் பின் இன்று (வியாழக்கிழமை) முதல் வழக்கமான சாதாரண பழைய கட்டணத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை இயக்கப்பட்டது. அத்துடன் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை 4 பெட்டிகளுடனும், குன்னூர் முதல் உதகை வரை 5 பெட்டிகளுடனும் இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம்போல் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக உதகைக்கு பகல் 11.55 மணிக்குச் செல்லும். மீண்டும் உதகையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடையும். இதில் பயணம் செய்ய இணைய தளம் வழியாக டிக்கெட் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...