சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள்: கோவை கோர்ட் தீர்ப்பு!

கோவை. டிசம்பர். 31- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.


கோவை. டிசம்பர். 31- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.

கோவை சாய்பாபா காலனி, கே.கே.புதூரைச் சேர்ந்தவர் பாலன் (வயது 51) டிரைவர். இவர் தனது வேனில் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்று வந்தார். அவர் தனது வேனில் வைத்து மாற்றுத்திறனாளி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார் கடந்த 2017-ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் பாலனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாலனுக்குச் சொந்தமான வாகனத்தை அரசிடம் ஒப்படைத்து அதில் வரும் தொகையை அபராதம் விதிக்கப்பட்ட தொகை மற்றும் சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும், அரசு வழங்கும் நிவாரணத்தொகையான ரூபாய் 5 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...