மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது!

கோவை: கோவை வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.


கோவை: கோவை வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை என்ஜினீயர்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பெல் நிறுவன என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள கட்சி சின்னங்கள், கட்டுப்பாட்டு எந்திரத்தில் உள்ள பதிவுகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, பெல் நிறுவன என்ஜினீயர்கள் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த மாதம் வரை நடைபெறும். ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்க திட்டமிட்டுள்ளதால் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கூடுதல் வாக்குச்சாவடிகள் கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்றார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...