கோவை: கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குற்ற வழக்குகள் குறைவு. அதேபோல் திருட்டு போன 8.45 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டிருக்கிறது என மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா கூறினார்.

தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி பெரியய்யா கோவை ரேஸ் கோர்சில் உள்ள அலுவலகத்தில் நேற்று மாலை நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சாலை விபத்து உயிரிழப்பு 2,082 ஆக இருந்தது. விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வாகன விபத்து இறப்பு இந்த ஆண்டு 1,675 ஆகக் குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 19.55 சதவீதம் குறைவு. 2019-ம் ஆண்டு மொத்தம் 12,619 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 10,286 ஆகக் குறைந்துள்ளது. இது 18. 48 சதவீதம் குறைவு.
நடப்பாண்டில் மொத்தம் 33 லட்சத்து 93 ஆயிரத்து 835 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 14 லட்சத்து 18 ஆயிரத்து 798 வழக்குகள் அதிகமாகும். இந்த ஆண்டு மோட்டார் வாகன வழக்குகளுக்காக ரூபாய் 20 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரத்து 340 அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. போலீஸ் நிலையங்கள் வாரியாக அதிக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து `பிளாக் ஸ்பாட்' எனக் குறியிட்டு அங்கு விபத்துகள் நடக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் ஒருநாள் விபத்து இல்லாத நாளாக அறிவித்து அன்று விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 102 குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஆதாயக் கொலை திருட்டு வழக்குகள் 1,454 பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 766 வழக்குகள் குறைவு. கடந்த ஆண்டு 15 ஆதய வழக்குகளும், 238 வழிப்பறி வழக்குகளும், இந்த ஆண்டு 13 ஆதாய வழக்கும், 111 வழிப்பறி வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கு மண்டலத்தில் திருட்டுபோன சொத்துகளில் 68 சதவீத பொருட்கள் மீட்கப்பட்டது. அதாவது திருட்டுபோன ரூபாய் 12.36 கோடி சொத்துக்களில் ரூபாய் 8.45 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டு அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.