ஊரடங்கால் வேலை இழந்த வாலிபர்: பைக் டியூ கட்டமுடியாமல் தற்கொலை!

கோவை: ஊரடங்கால் வேலை இழந்த வாலிபர் கடனாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு டியூ கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.



கோவை: ஊரடங்கால் வேலை இழந்த வாலிபர் கடனாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு டியூ கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகா நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் லட்சுமணன் (வயது 27). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு லேத் ஒர்க் ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். பின்னர் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் லட்சுமணன் வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் மோட்டார் சைக்கிளுக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

கடனை அடைப்பதற்காக தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பணம் கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக லட்சுமணன் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டார். மேலும் ஆசை ஆசையாக வாங்கிய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விடுவார்களோ என்ற அச்சமும் அவருக்கு அதிகரித்தது. வீட்டில் தனியாக இருந்தஅவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...