துணிப்பையில் சுற்றி சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பிணமாக மீட்பு!

கோவை: துணிப்பையில் சுற்றப்பட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது.


கோவை: துணிப்பையில் சுற்றப்பட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் கிராமத்தை யொட்டி கோவை கொச்சின் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை செல்கிறது. இன்று காலை சர்வீஸ் சாலையின் ஓரத்தில் துணிப்பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பையை எடுத்துப் பார்த்தனர். அதில் இறந்த நிலையில் குழந்தை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று குழந்தையை எடுத்துப் பார்த்தபோது இறந்தது தெரியவந்தது. அது ஆண் குழந்தை என்பதும், பிறந்து ஒரு வாரமே இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாலையில் குழந்தையை வீசிச் சென்றது யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையைக் கொன்று வீசினாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மீட்கப்பட்ட இடத்தில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளதால். அங்கு ஏதாவது குழந்தைகள் காணாமல் போனதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...