வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் தற்கொலை, இளம்பெண் மாயம், நண்பரைத் தாக்கிய கூலித்தொழிலாளி கைது!

கோவை: வெவ்வேறு சம்பவங்களில் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். வேலைக்குச் என்ற இளம்பெண் மாயமானார். மது வாங்க பணம் தர மறுத்த நண்பரை மதுபாட்டிலால் தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.


கோவை: வெவ்வேறு சம்பவங்களில் மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார். வேலைக்குச் என்ற இளம்பெண் மாயமானார். மது வாங்க பணம் தர மறுத்த நண்பரை மதுபாட்டிலால் தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கோவையில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் பற்றிய விவரம் வருமாறு:-

கோவை புதூர் அருகே உள்ள முன்னாள் ராணுவ வீரர் காலனியைச் சேர்ந்தவர் வினோத் சாலமோன் (வயது 48) டிரைவர். இவருக்கு திருமணமாகி சுனிதா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வினோத் சாலமோன் குடித்துவிட்டு வந்தார். இதை அவரது மனைவி சுனிதா கண்டித்தார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுனிதா கணவரிடம் கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கோபித்துக்கொண்டு சென்ற மனைவியை வினோத் சாலமன் அழைத்து வரச் சென்றார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த வினோத் சாலமன் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை புதூர் அருகே உள்ள ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகள் லாவண்யா (வயது 20). அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது பெற்றோரிடம் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் வேலை முடிந்து நீண்ட நேரமாகியும் லாவண்யா வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடி எந்தப் பயனும் இல்லை. இதுகுறித்து அவரது தாய் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லாவண்யாவை தேடி வருகிறார்கள்.

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது 22) டிரைவர். இவர் தனது நண்பரும் கூலித்தொழிலாளியுமான அதே பகுதியைச் சேர்ந்த தெய்வராஜ் என்பவருடன் சேர்ந்து நேற்று ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது குடித்தார். இந்நிலையில் மீண்டும் மது வாங்க வேண்டுமென முருகேசனிடம் தெய்வராஜ் பணம் கேட்டுள்ளார். முருகேஷ் பணம் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தெய்வராஜ் மது பாட்டிலால் முருகேஷை தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...