கோவை: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை புதுபித்து தர வேண்டும், என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல், சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகிவிட்டன. இதனால், வங்கி கடன் கூட பெற முடியாத சூழ்நிலையில் உள்ளதாக சாலையோர வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறியதாவது:
கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும், என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சி சார்பாக சிறப்பு வழிகாட்டுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு ஆவணங்கள் பெறப்பட்டு, அதனை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வங்கி கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இன்னமும் புதுபிக்கப்படவில்லை. இதனால், வங்கிகளில் சில வியாபாரிகளுக்கு கடன் தர மறுக்கப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் போது சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அடையாள அட்டைகள் தேவைப்படுகிறது. தேர்தல் வருவதற்குள் அடையாள அட்டைகளை மாநகராட்சி நிர்வாகம் புதுபித்து தரவேண்டும், என கோரிக்கை விடுத்தார்.