உதகை மலை ரயில் சேவை நாளை முதல் மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

நீலகிரி: உதகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் நாளை (31.12.2020) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



நீலகிரி: உதகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் நாளை (31.12.2020) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள மலைரயிலில் பயணிப்பதை தங்களின் சுற்றுலா திட்டங்களில் ஒரு அம்சமாக வைப்பது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மலை ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் மற்றும் உதகை - குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இம்மாதம் 7ம் தேதி முதல் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து நாளை முதல் துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மலைரயில் பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனை ஓட்டப் பணிகளை பணிமனை ஊழியர்கள் (work shop) தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...