கோவையில், கொரோனா வைரஸ் சமூகத் தொற்று கண்டறிய 3-ம் கட்ட ஆய்வு!

கோவை: கோவையில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளதா? என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா சமூக பரவலாக மாறி உள்ளதா? என்பதைக் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஐ.சி.எம்.ஆர் சார்பில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறி உள்ளதா என்பதைக் கண்டறிய பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் முதல்கட்ட ஆய்வு மே மாதம் நடந்தது.

கோவையில் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்பட 10 இடங்களில் தலா 40 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2.5 சதவீதம் பேருக்கு அவர்களது உடலில் எதிர்ப்பு உயிரி உருவாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதே பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 7.5 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு உயிரி உருவானது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், `ஐ. சி. எம். ஆர் நடத்திய ஆய்வில் இது வரை கோவையில் அதிகபட்சமாக 22.5 சதவீத நபர்களுக்கு மட்டுமே எதிர்ப்பு உயிரி உருவாகியிருப்பது தெரிய வந்தது. தற்போது நடத்தியுள்ள ஆய்வில் 25 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அதே பகுதிகளில் 400 பேரிடமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 100 சுகாதாரத்துறை பணியாளர்களிடமும் கூடுதலாக இம்முறை ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன' என்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...