வாசன் பிறந்த நாள் விழாவில், 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவை!

கோவை: கோவையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டன.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா கோவை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது.



கவுண்டம்பாளையம் பகுதியில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் த.மா.கா. துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் 2 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். அத்துடன் த.மா.கா. கொடியை ஏற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

விழாவுக்கு மாநில துணைத் தலைவர் குனியமுத்தூர் எம்.ஆறுமுகம், கோவை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் டாக்டர் வி.வி.வாசன், கோவை புறநகர் வடக்கு மாவட்டத் தலைவர் அன்னூர் கே.ராமலிங்கம், கோவை புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், சி.ஏ. ராஜ்குமார் மற்றும் டி.செல்வராஜ், கட்சி பிரமுகர்களான சி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.பி.சாமி, சுகுமார், மதிபாலா குமார், எஸ்.ஆர்.கண்ணன், சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

விழாவில் இளைஞரணி மாநில துணைத்தலைவர் சி.பி.அருண் பிரகாஷ், மாணவரணி மாநில துணைத் தலைவர் அஸ்வின், மாணவரணி மாநில பொதுச்செயலாளர் சோபின் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ரபீக், சிவராஜ், ராதாகிருஷ்ணன், சுனில், அய்யாசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...