வால்பாறையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கார்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்: மக்கள் பீதி!

கோவை: வால்பாறையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் கார்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் கார்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த அப்பர்பாரளை எஸ்டேட்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென வந்த 13 காட்டுயானைகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் அங்குள்ள சத்துணவுக்கூடத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, சர்க்கரையைத் தின்றதுடன் தூக்கி வீசி நாசப்படுத்தின. பள்ளிக்கூடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் வேன் போன்றவை சேதமடைந்தன. கார்களின் கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன.

சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் எழுந்து பார்த்தபோது குடியிருப்புக்கு அருகே காட்டு யானைகள் கார்களை சேதப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால், காட்டுயானைகள் குடியிருப்புகளில் உள்ள வனப்பகுதிக்கு சென்று நின்று கொண்டிருந்தன. இதனால் அப்பகுதியில் அச்சமும், பீதியும் நிலவுகிறது.

இவற்றைக் கருத்தில்கொண்டு இப்பகுதியில் அகழிகள், மின் வேலிகள் அமைத்துத் தரும்படி பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் யானை எங்கே நிற்கிறது, எப்படி வருகிறது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகிறார்கள். ஆகவே உடனடியாக இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...