கோவை: பொள்ளாச்சி பகுதியில் மூடுபனி நிலவியதால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

தமிழகத்தின் தென்னை நகரம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி மேற்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாக உள்ளது. இப்பகுதியில், கடந்த சில வருடங்களாக பருவமழை சரிவர பெய்யாமல் இருந்து வந்தது. மேலும் கடந்த சில வருடங்களாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இருந்துவந்த மூடுபனிஇல்லாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து, நகர் மற்றும் வனப்பகுதி பசுமையாக உள்ளது. மேலும் பொள்ளாச்சி, ஆழியாறு ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

காலை 8 மணி வரை பனிமூட்டம் இருப்பதால், பொள்ளாச்சி - கோவை சாலை, பொள்ளாச்சிநடுப்புணி சாலை, பொள்ளாச்சி - வால்பாறை சாலை உள்ளிட்ட பகுதிகளில், வாகன ஓட்டிகள் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கிச் சென்றனர். இருப்பினும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.