இன்று கம்யூனிஸ்டு போர்; நேற்று இரவோடு இரவாக சாலை சீரமைத்த அதிகாரிகள்

கோவை: கோவை புலியகுளம் முதல் சுங்கம் வரை பல்வேறு விதமான பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாகக் கிடந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.


கோவை: கோவை புலியகுளம் முதல் சுங்கம் வரை பல்வேறு விதமான பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாகக் கிடந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். இதை சரி செய்ய வேண்டுமென கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுவிதமான போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் இரவோடு இரவாக சாலையை சீரமைத்துக் கொடுத்தனர். இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.



கோவை மாநகராட்சி 70 வட்டம் புலியகுளம் முதல் சுங்கம் வரையிலான சாலை கடந்த ஓராண்டு காலமாக ரோட்டின் நடுப்பகுதிகளில் குழிதோண்டப்பட்டு அவை மூடப்படாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். சில நேரங்களில் குழிகள் இருக்கும் இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக புலியகுளம் காவல்நிலையம் மற்றும் கார்மல் கார்டன் பள்ளி அருகில் உள்ள சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.



இந்நிலையில் இதுகுறித்துமார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பலமுறை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினம் தினம் விபத்துகள் நடப்பதால் இந்தச் சாலை வழியாகச் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள். இதனையடுத்து இந்தச் சாலையில் வாகனம் ஓட்டி சாதனை புரியும் வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவிப்பது என மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.



அதன்படி இன்று (செவ்வாய்) காலை 10 மணிக்கு புலியகுளம் மத்திய பகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இந்தச் சாலையில் வாகனங்கள் ஓட்டும் வாகன ஓட்டிகளை பாராட்டி மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வாழ்த்தும் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டப்பட்டது. இதற்கிடையே கோவை மாநகராட்சி சார்பில் நேற்று (திங்கள்) இரவோடு இரவாக குண்டும் குழியுமாக உள்ள சாலையில் ஜல்லிக்கற்களைக் கொண்டு நிரப்பி தார் ஊற்றி சாலை செப்பனிடப்பட்டது. மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி அதிகாரிகளின் இந்தச் செயல்பாடு மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக பகுதி மக்களும் அந்த வழியாக சாலையில் செல்வோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...