திருப்பூர்: காதலியின் கழுத்தை அறுத்ததுடன் தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு டிரைவர் தற்கொலை முயன்றார். இச்சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27). சென்னையில் தங்கி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷுக்கு, சொந்த ஊரைச் சேர்ந்த எழில்மதி (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், எழில்மதியை பார்ப்பதற்காக வெங்கடேஷ் சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார். வளர்மதி பாலம் அருகே லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். வெங்கடேஷைப் பார்க்க, எழில்மதியும் லாட்ஜுக்குச் சென்றார். அங்கு அவர்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேஷ், எழில்மதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். தொடர்ந்து, வெங்கடேஷ் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில், வெங்கடேஷ் மீது தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.