சுங்கச்சாவடிக் கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும்: முதலமைச்சரிடம் பொதுமக்கள் மனு!

கோவை: சுங்கச்சாவடிக் கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று சூலூர் பகுதி மக்கள் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.


கோவை: சுங்கச்சாவடிக் கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று சூலூர் பகுதி மக்கள் முதலமைச்சரிடம் மனு அளித்தனர்.

தமிழக முதல்வர் இன்று மாலை விமானம் மூலமாக சென்னையிலிருந்து கோவை வந்தார். பிறகு அங்கிருந்து சாலை வழியாக சேலம் புறப்பட்டுச் சென்றார். அப்போது சூலூர் வட்டம் கணியூர் பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து தமிழக முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு உத்தரவின்படி சூலூர் வட்டம் கணியூர் டோல்கேட்டில் 20 கிலோ மீட்டரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுங்கவரிக் கட்டணம் நீக்கப்பட்டிருந்தது. இப்போது சுங்க நிறுவனம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் சுங்கவரி வசூல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப் பகுதியில் வியாபாரிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் என பல்வேறுவிதமான மக்கள் வசிக்கின்றனர். கணியூர் டோல்கேட்டைச் சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு வழங்கி வந்த இலவச டோல்கேட் கட்டணத்தை தொடர்ந்து வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து குறு மற்றும் சிறு வியாபாரிகள் பொதுமக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...