கோவை: டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி செல்ல முயன்ற விவசாய சங்க தலைவர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

சூலூர் அருகே உள்ள அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். சண்முகம் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், 2020 மின் சட்டத்துக்கு எதிராகவும் மத்திய அரசு அலுவலகமான சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடுவதற்காக சென்னை நோக்கி பேரணி தொடங்கப் போவதாக அறிவித்தார். இதற்காக அவர் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ராமசாமிக்கு கவுண்டர், மாரப்ப கவுண்டர் கவுண்டர், ஆயிக் கவுண்டர் ஆகியோரது நினைவிடம் உள்ள திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் இருந்து பேரணியாக புறப்பட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சண்முகத்தை அவரது வீட்டில் வைத்து சூலூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சண்முகம் போலீஸ் நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். கைது நடவடிக்கை எடுத்தாலும் சென்னை நோக்கி திட்டமிட்டபடி பெருமாநல்லூரில் இருந்து பேரணி தொடங்கும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் விவசாய சங்கத் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.