கோவை: கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் காரை வழிமறித்து ரூ.27 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் திடீர் திருப்பமாக காரில் கடத்தி வந்த ரூபாய் 1 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் (50), ரியல் எஸ்டேட் அதிபர். தனது காரில் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடந்த 25ம் தேதி சென்றார். காரை டிரைவர் சம்சுதீன் (42), ஓட்டினார்.
இதனிடையே, அவர்களின் கார் கோவை நவக்கரை அருகே வந்தபோது 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அப்துல் சலாமை கத்தி முனையில் மிரட்டி தாக்கிவிட்டு, கார் மற்றும் ரூ.27 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் கே.ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையர்கள் கடத்திச் சென்ற அப்துல் சலாமின் கார் கோவை சிறுவாணி சாலை மாதம்பட்டி அருகே மீட்கப்பட்டு கேஜி சாவடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், பேரூர் பச்சாபாளையம் அருகே அப்துல் சலாம், சம்சுதீன் ஆகியோரின் செல்போன்களும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, மீட்கப்பட்ட அப்துல்கலாமின் காரை தனிப்படை போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது, காரின் கதவுகள் உடைக்கப்பட்டு பின் பகுதியின் அடிப்பகுதியில் நூதனமான 4 ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதைத் திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது.
இதனை தொடர்ந்து, உடனடியாக அவற்றை போலீசார் பறிமுதல் செய்தபோது, அதில் ரூ.1 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அப்துல் சலாம் மற்றும் சம்சுதீன் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். காரில் ஹவாலா பணம் கடத்தியதை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் தான் அப்துல் கலாமை வழிமறித்து தாக்கி ரூ.27 லட்சத்தை மட்டும் கொள்ளையடித்தது உள்ளது.
ஆனால், காருக்குள் ரகசிய அறையில் பணம் இருந்தது தெரியாததால் கொள்ளைக்காரனாக விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, போலீசார் அப்துல் சலாமின் செல்போனை ஆய்வு செய்த போது அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் போலீசார் இந்த பணம் ஹவாலா பணமா? இல்லை தேர்தல் செலவுக்காக கணக்கில் காட்டப்படாத பணமாக விநியோகிக்கப்பட்ட பணமா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ரூபாய் 27 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக ஹவாலா பணம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.