திருப்பூரில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தடையை மீறி கழுத்தில் பாட்டில் மாலை அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தடையை மீறி கழுத்தில் பாட்டில் மாலை அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தடையை மீறி கழுத்தில் பாட்டில் மாலை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று மதுபான கடைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.



ஆனால், இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போடப்பட்டிருந்த பந்தல், நாற்காலி ஆகியவற்றை காவல்துறையினர் மூலம் அகற்றப்பட்டதால் போராட்டக் குழுவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, பந்தல் அகற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் தடையை மீறி கழுத்தில் பாட்டில் மாலை அணிந்து கருப்பு கொடியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...