கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!

கோவை: கோவையில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: கோவையில் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு மூதாட்டிகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை அன்னூர் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி முருகம்மாள் (வயது97). இத்தம்பதியரின் மகன் ரங்கசாமி. இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற வேண்டும் எனக்கூறி வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுள்ளார். மேலும் அப்போது 25 சென்ட் இடத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொள்வதாக கூறிய ரங்கசாமி மொத்தமுள்ள 13 ஏக்கர் நிலத்தையும் தன் பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ரங்கசாமி இறந்துவிட்டதால் வாழ்வாதாரமின்றி தவித்த முருகம்மாள் சொத்துப் பத்திரத்தை மருமகள் பாப்பாத்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் மருமகள் தர மறுத்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முருகம்மாள் பாட்டி தனது தங்கைகளான மாராத்தாள், லட்சுமி, பாப்பாத்தி ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அங்கு அவர்கள் நான்கு பேரும் தங்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.



கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு நாள் என்பதால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மூதாட்டிகளின் இந்தச் செயலை கண்டனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று மூதாட்டிகள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மீட்டனர்.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அன்னூர் தாசில்தார் சந்திரா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மூதாட்டிகள் நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...