கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவை குற்றாலம் இன்று திறக்கப்பட்டது

கோவை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்பட்டது.



கோவை: கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்பட்டது.



கொரோனா பரவல் காரணமாகக் கோவையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால், போதிய நீர்வரத்து இருந்தும் கோவை குற்றாலத்துக்குச் செல்லச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சுற்றுலாத்தலங்களில் கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், கோவை குற்றாலம் அருவி வனப்பகுதியிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளதால், கப்பட்டுவந்தது. நீர்வீழ்ச்சி பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததை வனத்துறையினர் உறுதி செய்து வந்தனர்.



இதனையடுத்து, 9 மாதங்களுக்குப் பிறகு இன்று கோவை குற்றாலம் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கூறுகையில்::



சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் டிக்கெட் கவுன்ட்டரில் பணம் செலுத்தி முகக்கவசம் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும், சாடிவயல் பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள் எடுத்துச் செல்கிறார்களா? என உடமைகள் பரிசோதிக்கபடுகின்றன. நுழைவுவாயிலில் நீண்ட வரிசையில் தனிநபர் இடைவெளியுடன் நிறுத்தப்பட்டு 50 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்ட, பின்னர் பேருந்துக்கு 20 பேர் வீதம் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர், என்றார்.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி திறக்கப்பட்டுள்ள நிலையில் விடுமுறை தினமான இன்று கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க சாடிவயல் பகுதியில் குவிந்து வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...