நீலகிரியில் குளிர்ச்சியான சூழல்: சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரிப்பு!

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையான வெள்ளிக்கிழமை மற்றும் சனி,ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குளுகுளு சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையான வெள்ளிக்கிழமை மற்றும் சனி,ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக இங்குள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் தற்போது குளிர்ச்சியான காலநிலை காணப்படுகிறது. இந்த தட்பவெப்பநிலையை அனுபவிப்பதற்காகவே தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும்விதமாக இங்கு இதமான தட்பவெப்பநிலை நிலவி வருகிறது, தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்படுகின்றனர். அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு நிகழ்கிறது, பகல் நேரங்களில் சில்லென்று இதமான காற்று வீசுகிறது, இந்த காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.



தாவரவியல் பூங்காவுக்கு கிறிஸ்துமஸ் நாளான வெள்ளிக்கிழமை 6,813 சுற்றுலாப் பயணிகளும், சனிக்கிழமை 9,849 சுற்றுலாப் பயணிகளும் வந்தனர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப்பயணிகள் வருகை இருமடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை 3,535 பேர், ஞாயிற்றுக்கிழமை 6184 பேர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இந்த வாரம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...