லாட்டரி கடைக்குள் புகுந்த கண்டெய்னர் லாரி: 2 பேர் தப்பிய சி.சி.டி.வி காட்சி!

கோவை: வாளையாறு பகுதியில் லாட்டரி கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பேர் தப்பிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.


கோவை: வாளையாறு பகுதியில் லாட்டரி கடைக்குள் கண்டெய்னர் லாரி புகுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பேர் தப்பிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கோவை - கேரள எல்லையான வாளையாறு வழியாக பாலக்காடு நோக்கி கண்டெய்னர் லாரி நேற்று இரவு சென்றுள்ளது. அப்போது வாளையாறு சோதனைச்சாவடியைத் தாண்டி சென்றபோது லாரி ஓட்டுநர் சாலையோரத்தில் லாரியை நிறுத்த முயன்றதாக தெரிகிறது. அப்போது பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற இரு சக்கர வானத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த லாட்டரி கடைக்குள் புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் மயிரிழையில் சாலையோரத்தில் இருந்த இரண்டு பேர் உயிர் தப்பிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும் லாரி நியூட்ரலில் விழுந்ததால் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், ஓட்டுநர் ஹேண்ட் பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாகவும் வாளையாறு போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பியதாக தெரிவித்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...