கோவையில் தொழிலதிபரின் காரை வழிமறித்து ரூ.27 லட்சம் கொள்ளையடித்த சம்பவம்: தொழிலதிபரின் கார் மீட்பு!

கோவை: கோவையில் தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி ரூ.27 லட்சம் பணம் மற்றும் காரை ஒரு கும்பல் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவத்தில் கார் இன்று மாதம்பட்டி பகுதியில் மீட்கப்பட்டது.


கோவை: கோவையில் தொழிலதிபர் காரை மறித்து கத்தியை காட்டி ரூ.27 லட்சம் பணம் மற்றும் காரை ஒரு கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவத்தில் கார் இன்று மாதம்பட்டி பகுதியில் மீட்கப்பட்டது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டூர் பகுதியை சேர்ந்த அவரான் என்பவரின் மகன் அப்துல் சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் சம்சுதீன் ('42)என்ற டிரைவருடன் நேற்று அதிகாலை கோவையில் இருந்து 27 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது காரில் கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே, பாலக்காடு சாலை நவக்கரை நந்தி கோவில் அருகே, நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த கார் ஒன்று அப்துல் சலாம் சென்ற காரை வழிமறித்தது.

அந்த காரில் இருந்து இறங்கி வந்த ஐந்து பேர் அப்துல் சலாமை கத்தியை காட்டி மிரட்டி அப்துல் சலாமையும் அவரது டிரைவர் சம்சுதீனையும் காரில் இருந்து இறக்கி தள்ளி விட்ட அந்த கும்பல் அப்துல் சலாம் வந்த காரை அவர் கொண்டு வந்த 27 லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளை அடித்து சென்றது.

இதையடுத்து அப்துல் சலாம் கே.ஜி.சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து கோவை போலீஸ் எஸ்.பி.அருளரசு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க மூன்று தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கொள்ளை கும்பல் அப்துல் சலாமிடம் இருந்து பறித்துச் சென்ற கார் பேரூரை அடுத்த மாதம்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த சமபவத்தில் ஈடுபட்ட கும்பல் கேரளாவை நோக்கிச் சென்று இருக்கும் என போலீசார் தேடி வந்த நிலையில், கோவையில் கார் மீட்கப்பட்டதால் கொள்ளையர்கள் கோவை நகரில் அல்லது புறநகர் பகுதியில் எங்கேனும் பதுங்கி இருக்கிறார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...