சீமானைக் கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்!

கோவை: சீமானைக் கண்டித்து கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.


கோவை: சீமானைக் கண்டித்து கோவையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

கோவையில் மாநகர் பகுதி முழுவதும் நடிகர் விஜய் ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கண்டிக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அண்மையில் சீமான் செய்தியாளருக்கு அளித்த பேட்டியின்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்க வேண்டுமெனவும் விஜய் குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

இந்த கருத்துக்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைக் கண்டிக்கும் விதமாக சமூக வலைத்தளமான டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் சீமானுக்கு எதிரான ஹேஸ் டேக்குகளைப் பரப்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சீமானைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதில் சீமான் கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வரும் சூழலில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றதாகவும், ஆனால் நடிகர் விஜய் ரசிகர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 120 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாகவும், நடிகர் விஜய் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் சீமானுக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர். எனவே, உடனடியாக சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாக்கியங்களை வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...