தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, 2 லட்சம் பணம் திருட்டு!

கோவை: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.


கோவை: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை கோவில்பாளையம் காபி கடை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் மோகன் மனைவி கவுசல்யா. தனியார் நிறுவன ஊழியர். இவர்களது மகன் சூரிய பிரபா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் சேரன் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சூரிய பிரபாவும் அவரது கணவர் லோகநாதனும் வீட்டில் வந்து தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவமனை சென்றனர்.

இதையடுத்து அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த வைரம் மற்றும் பிளாட்டினம், மோதிரம் உள்பட 20 பவுன் தங்க நகை, ரூபாய் 2 லட்சம் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 6 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் திருட்டு மற்றும் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...