முகவரி கேட்பதுபோல் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு!

கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.


கோவை: கோவையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 4 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர்.

கோவை கணபதி வி.ஜி.ராம் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபா (வயது 40). இவர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தீபாவிடம் ஒரு காகிதத்தை கொடுத்து முகவரி கேட்டனர். அந்த காகிதத்தை தீபா வாங்க கை நீட்டியபோது அவர்கள் காகிதத்தை தவற விட்டனர்.

தீபா அந்த காகிதத்தை குனிந்து எடுக்க முயன்றபோது அவரது கழுத்திலிருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் மறைந்தனர். அப்போது அவர் கூச்சல் போட்டு அலறியதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்கள் விரட்டிப் பிடிப்பதற்குள் அந்த ஆசாமிகள் மாயமாய் மறைந்தனர்.

இதுகுறித்து தீபா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...