ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ்!

கோவை: நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகிறார்.


கோவை: நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகிறார்.

தமிழக மக்களால் 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்தார். டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அப்போது 'அண்ணாத்த' படம் ஷூட்டிங் நடைபெற இருப்பதால் இந்த காலதாமதம் எனக் கூறினார்.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் 'அண்ணாத்த' படப்பிடிப்பிற்காக சென்றார். நேற்று முன்தினம் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை திடீரென ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஒரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் கூறியிருந்தனர். மேலும், அவருக்கு நீண்ட ஓய்வு தேவை எனக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஒரு அறிக்கை வெளியானது. அதில் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரத்த சீரம் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இன்று மாலைக்குள் அந்த சோதனை முடிந்தவுடன், இன்று மாலை அவருடைய உடல் முழு பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்யும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...