பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த அருணாச்சலம் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கம்..!

கோவை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.


கோவை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் சென்னை கமலாலயத்தில் பாஜகவில் இணைந்தார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியது முதல் அருணாச்சலம் அக்கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அருணாச்சலம் அவர்கள் கட்சியின் கோட்பாடுகள் வழிகாட்டுதல்களுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான காரணத்தினாலும் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே, கட்சியினர் அனைவரும் அவருடன் கட்சி சம்மந்தப்பட்ட எந்த விதமான தொடர்புகளையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...