கோவை கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது; ஓட்டல் ஊழியரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியீடு

கோவை: கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க கூடிய மூன்று மாணவர்கள் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்க கூடிய மூன்று மாணவர்கள் குடிபோதையில் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை அருகே உள்ள நரசிபுரம் பகுதியில் உள்ள ரங்கநாதர் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மூன்றும்மாணவர்கள், மது போதையில் அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றுள்ளனர். அங்கே சென்ற இவர்கள் கடை ஊழியரிடம் ஆம்பிலேட் கேட்டனர். அப்போது இவர்கள் ஒரு ஆம்பலைட்டுக்கு மூன்று இலைகள் கேட்டதாக தெரிகிறது. கடை ஊழியர்கள் ஒரு ஆம்லெடுக்கு எதற்கு மூன்று இலைகள் என கூறி கொடுக்க மறுத்துள்ளனர்.



இதனால், கோபம் அடைந்த மாணவர்கள் கடை ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி சரமாரியாக தாக்கினர். உங்க கடை ஓனர் எங்கடா, நாங்க இந்த ரங்கநாதர் இன்ஜினியரிங் காலேஜ்ல தான் படிக்கிறோம். எவ்வளவு தடவை இந்த கடைக்கு வந்திருக்கோம். எங்களை தெரியாதா? என ஒரு மாணவன் சொல்ல, மற்றொரு மாணவர் இந்தத் தாக்குதல் காட்சியை வீடியோ எடுத்தார். சரமாரியாக தாக்க பட்ட ஓட்டல் ஊழியர்கள் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.

இந்நிலையில், அந்த மாணவர்கள் இந்த தாக்குதல் வீடியோவிற்கு பாட்டு போட்டு மீம்ஸ் செய்து அதை யூடியூபில், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் இந்தத் தாக்குதல் வைரலானது. ஓட்டல் பெயருடன் வீடியோ வந்ததை பார்த்து பதறிப்போன கடை உரிமையாளர், நேற்று ஊழியர்களை அழைத்து விவரம் கேட்டபோது அவர்கள், ஆமா, அந்த மாணவர்கள் வந்தாங்க, தூக்கிப் போட்டு அடிச்சிட்டு போய்ட்டாங்க, என்றனர். இதை கேட்ட அந்த ஓட்டல் உரிமையாளர், ஆலாந்துரை போலீசில் புகார் அளித்தார்.

ஆலாந்துரை போலீசார் வீடியோ பதிவுகளை பார்த்து விட்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள் பிரவீன் (19), விக்னேஷ் (20), ரமேஷ் (20), ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் இந்து அமைப்பிலும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...