முதல்வர் குறித்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது வழக்கு தொடரலாம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.


கோவை: முதல்வரின் ஊழல் குறித்து ஆளுநரிடம் தி.மு.க கொடுத்த புகார் பொய்யாக இருந்தால், தி.மு.க மீது வழக்கு தொடரலாம் என்று பொள்ளாச்சியில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

பொள்ளாச்சியில் தி.மு.க நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது கலைஞர் கருணாநிதி மீதும், அமைச்சர்கள்மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா? என அ.தி.மு.கவிடம் சவாலாகக் கேட்கிறோம். சர்க்காரியா கமிஷனில் ஊழல் எனக் கூறிய எம்.ஜி.ஆர் சாட்சி சொல்லாமல் ஓடிவிட்டார். வருமானவரித் துறையினர் தகுந்த ஆதாரத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர்மீது ஊழல் குற்றச்சாட்டு சொன்னதால் கையும் களவுமாக பிடித்துள்ளது. இந்த ஊழலில் இருந்து தப்பிக்க வழி செய்தால் அது மத்திய அரசின் அயோக்கியத்தனம். அதேநேரத்தில் முதல்வர் மீது கவர்னரிடம் தி.மு.க கொடுத்த ஊழல் புகார் பொய்யாக இருந்தால் தி.மு.க மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...