கோவை: கோவையில் திருமணமான புது மாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் ஆனது. திருமணம் முடிந்த பின்பு ராஜா தனது மனைவியுடன் கோவை இரத்தினபுரியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டை விட்டு வெளியேறிய ராஜா நேராக வடகோவை ரயில் நிலையத்திற்குச் சென்றார். பின்னர் அங்குள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ரயில் ஒன்று வந்தது. பிளாட்பாரத்தில் நின்றிருந்த ராஜா திடீரென அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். மேலும் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.