கோவை: கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் இ.பி காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தீபா (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அதே பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். தீபாவின் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்த அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் திருடர்கள் மாயமாய் மறைந்தனர்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் தீபா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.