திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையைத் துவங்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் சிறியதும் பெரியதுமாக லட்சக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் இதுவரை பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைக்கவில்லை எனவும் உடனடியாக விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.