கோவை: பிரபல மலையாள சினிமா இயக்குனர் மூளைச்சாவு அடைந்தார்.

மலையாள சினிமாவில் எடிட்டராக கால்பதித்தவர் ஷா நவாஸ் (வயது 37). இவர் ஏராளமான மலையாள சினிமாக்களில் எடிட்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் முதன் முதலாக கரி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு சினிமா விமர்சகர்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜெயசூரியாவை நாயகனாக வைத்து 'சூபியும் சுஜாதாவும்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். அந்த நேரத்தில்தான் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்தப் படத்தை ஓ.டி.டியில் வெளியிட தீர்மானித்தார். இதற்கு மலையாள சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர் எதிர்ப்புகளை மீறி ஓ.டி.டி தளத்தில் படத்தை வெளியிட்டார். அது சூப்பர் ஹிட்டும் ஆனது.
இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்காக கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடியில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு கடந்த சனிக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.