பூ மார்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட 95 பூக்கடைகள் ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை பூ மார்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை பூ மார்கெட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 95 பூக்கடைகளை ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

கோவையின் முக்கிய இடமான பூமார்க்கெட் பகுதியில் 140க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சத்தியமங்கலம், சிறுமுகை, பெங்களூரு, நீலகிரி, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து தினமும் 20 டன்களுக்கும் அதிகமான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் பூமார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து, இங்கு செயல்பட்டு வந்த கடைகள், புரூக் பாண்ட் சாலையில் உள்ள தேவாங்கர் பள்ளி மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன.

இதனிடையே, கோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 95 பூக்கடைகள் புதியதாக கட்டும் பணியானது, கடந்த மே மாதம் துவங்கியது. இந்த பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய கடைகள் ஏலம் மூலம் மட்டுமே வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய பூமார்க்கெட்டில் 100 கடைகள் அமைக்க மட்டுமே இட வசதி உள்ளது. ஆனால், அங்கு 140 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. எனவே, பழைய பூமார்க்கெட் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அப்பணிகள் நிறைவுற்ற பிறகு, அங்கு ஏற்கனவே கடைகள் நடத்தி வந்த 100 வியாபாரிகளுக்கு முறையாக வழங்கப்படும். தற்போது, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மலர் அங்காடி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் ஏலம் மூலமாக வியாபாரிகளுக்கு விரைவில் ஒதுக்கப்படும். இந்த ஏலத்தில் கலந்து கொண்டு கடைகளை எடுக்கலாம். ஏலம் நடைபெறும் விவரங்கள் விரைவில் மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...