கோவை கருமத்தம்பட்டி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் கைது!

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கருமத்தம்பட்டி சோமனூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம வாலிபர் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்று உள்ளார்.

அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் மூலம் வங்கி மேலாளருக்கு தகவல் சென்றது. உடனே வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, அங்கு பதிவான சிசிடிவி காட்சியை வைத்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வங்கி அதிகாரிகள் தகவல் அளித்தனர். போலீசார் அந்த புகைப்படத்தை கொண்டு மர்ம வாலிபரை தேடி வந்தனர்.

அப்போது, கருமத்தம்பட்டி 4 ரோடு சந்திப்பில் சந்தேகத்திற்குரிய வாலிபர் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த மர்ம வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் சர்ஜன் பாஸ்வான் (24) என்பதும், பீகார் மாநிலம் சித்தமாகி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2 மாதங்களாக கருமத்தம்பட்டி அடுத்த காடுவெட்டி பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உணவகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

மேலும், மது போதையில் இருந்த சர்ஜன் பாஸ்வான் கையில் பணம் இல்லாததால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் இன்று மாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...