கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு காந்திபுரம் பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பார்த்த போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரது கைப்பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர்மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தர்மபுரியைச் சேர்ந்த மாது (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதாகவும், அங்கு வளர்க்கப்பட்ட சந்தன மரத்தை வெட்டியபோது கிடைத்த சந்தன மரக் கட்டைகளை எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர் கூறியது உண்மைதானா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.