சாலையோரம் கிடந்த ஒரு டன் குப்பை: சமூக சேவை அமைப்பினர் அகற்றினர்!

கோவை: சமூக சேவை அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து கோவைப் பகுதியில் சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மற்றும் ஒரு டன் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர்.

கோவை: சமூக சேவை அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து கோவைப் பகுதியில் சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மற்றும் ஒரு டன் கண்ணாடி பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர்.



கோவை ஆனைகட்டி ரோட்டில் உள்ள தடாகம் தண்ணீர் பந்தல் முதல் மாங்கரை வரை உள்ள சாலையில் இருபுறமும் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை தமிழ்நாடு வன உயிரின அமைப்பின் தலைவர் அருண்குமார் மற்றும் இயற்கை, விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபனா மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் 'ஸ்பான்சர் ராம்ஸ் கோவை விருந்து' ராம்குமார் ஆகியோர் இணைந்து சுமார் ஒரு டன் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்றினர். பின்னர் அந்தக் குப்பைகள் அருகில் உள்ள பஞ்சாயத்து குப்பைக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. 

இதுகுறித்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்பின் தலைவர் அருண் குமார் கூறும்போது, 'கோவை வனத்துறையினர் அனுமதி கொடுத்தால் வனப்பகுதி சாலையோரங்களில் காணப்படும் பாட்டில்கள் மற்றும் பாலித்தீன் குப்பைகளை அகற்ற தயாராக உள்ளோம்' என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...