கோவை: கோவை செட்டிபாளையம் பேரூராட்சியில் உள்ள காடு குட்டையை சீரமைத்து, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கள்ளப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் செட்டிபாளையம் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
கோவை: கடந்த 200 ஆண்டுகளாக காடு ஒரு வேட்டை பொருளாக, பணப் பொருளாக மாற்றியுள்ளனர், மனிதர்கள். இயற்கையை நேசிக்காத அரசும், ஆளுமையும் மிகவும் மோசமானவர்கள், என திரைக்கலைஞர் பொன்வண்ணன் கோவையில் இன்று நடந்த புத்தக வெளியீடு நிகழ்வின் பொது உரையாற்றினார்.
பழங்குடியின மக்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வியல் குறித்து "காடர்" என்கிற சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர், வே.பிரசாந்த் என்பவர் படைத்துள்ளார். எதிர் வெளியீடு பதிப்பகம் வெளிக்கொணர்ந்து இருக்கும் இந்நூல் வெளியிட்டு விழா இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஓவியர் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன், சூழலியல் செயற்பாட்டாளர்கள் கோவை சதாசிவம், யோகநாதன் மற்றும் கவிஞர் உமாமகேஷ்வரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, "காடர்" புத்தகத்தை வெளியிட்டு பொன்வண்ணன் பேசுகையில்:
கோவை எனக்கு புதிய ஊரல்ல. கோவை என்பது எனக்கான அடையாளம். இந்த உலகில் வாழும் கோடான கோடி உயிரினங்களில் நாமும் ஒருவர். நம்மை போலவே நம்மை சார்ந்தும், சாராமலும் பல உயிரினங்கள் உள்ளன. ஆனால், சிந்தனையிலும், செயல்பாட்டிலும், மொழியை உருவாக்குவதிலும் தான் நாம் மற்ற உயிரிகளிடம் இருந்து வேறுபடுகிறோம்."
காடர் புத்தகம் காடு குறித்து முழுமையாக புரிந்து கொண்டு எழுதப்பட்ட புத்தகமாக நான் பார்க்கிறேன். யானையைப் பார்த்து மிரண்டு நிற்கும் மனிதர் கூட்டம் என்று துவங்கும் கதை, இறுதியில் முகாமிற்கு காலில் சங்கிலியுடன் பினைத்து கொண்டு செல்வது போன்று முடிவுறுகிறது. காடு தான் இயற்கையின் ஆதி அடையாளமாக உள்ளது. ஆனால் கடந்த 200 ஆண்டுகளாக காடு ஒரு வேட்டை பொருளாக, பணப் பொருளாக மாற்றியுள்ளனர் மனிதர்கள்.
சங்க இலக்கியங்களில் காடுகளில் தான் மனிதன் வாழ்க்கை தொடங்கியதாகவே பதியப்பட்டுள்ளது. ஐந்து வகை நிலப்பரப்புகளில் முதன்மையாக காடுகளை தான் பதிவு செய்கின்றன, நம் இலக்கியங்கள். தேயிலை பயிரிடுவதிலேயே, காடுகளை பணமாக பார்க்கும் போக்கு தொடங்கியது. ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு, துப்பாக்கி பயன்பாடு ஜமீன்களுக்கு வந்தது. அதன் வெளிப்பாடகவே மிருகங்களை கொன்று அதனை வீடுகளில் மாட்டி வைத்தனர்.
பின்னர், மலைகளில் இருந்து கனிம வளங்களை எடுக்க ஆரம்பித்தனர். அது முதல், தொடர்ச்சியாக 200 வருடங்கள் மலைகள் அளிக்கப்பட்டு வருகிறது. 'காடர்' பழங்குடியின மக்களின் பார்வையில் எழுதப்பட்ட ஒரு புத்தகமாக பார்க்கிறேன். இயற்கையை நேசிக்காத அரசும், ஆளுமையும் மிகவும் மோசமானது. நகரத்தில் உள்ள மக்கள் மலைவாழ் மக்களை வேற்று கிரக வாசிகளாகத்தான் பார்க்கிறோம். மனிதாபிமானம், இல்லாத பார்வையால் மலைவாழ் மக்கள் சிதைக்கப்படுவதை இந்த புத்தகம் பதிவு செய்துள்ளது, என்றார்.
பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சியுடன், காடர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.