நீலகிரி: வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. அவை, உதகை பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்காக, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. அவை, உதகை பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் மின்னணு இயந்திரங்கள்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்து சேர்ந்த இயந்திரங்கள்
இதற்காக, வெளிமாநிலங்களில் இருந்து, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம், பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுவரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, நீலகிரி மாவட்டத்திற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2 பெரிய லாரிகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவை, பாதுகாப்பாக பிங்கர் போஸ்ட் கூடுதல் மாவட்ட ஆட்சியர் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
683 வாக்கு சாவடி மையங்கள்
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 683 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு இயந்திரங்கள் -- பாலட் யூனிட் - 830, கண்ட்ரோல் யூனிட் - 470 ,வி.வி.பேட் - 560 ஆகிய இயந்திரங்கள் வந்துள்ளது.
அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் ஆய்வு
புதிதாக வந்துள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் நல்ல முறையில் உள்ளனவாா, என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டப் பின், அவை அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.